டெல்லியில் மினி மாரத்தான் போட்டியை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தொடங்கி வைத்தார்.
உலக இதய தினத்தையொட்டி டெல்லியில் தன்னார்வ அமைப்பு சார்பில் மினி மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, மினி மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தார். இந்தியா கேட் முதல் பாரத் மண்டபம் வரை 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற மாரத்தான் போாட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும், போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.