சென்னை பூந்தமல்லி அருகே மின்சார வயர்கள் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகியது.
ஆந்திராவைச் சேர்ந்த பவன் என்பவரது நண்பர் வெளிநாட்டில் இருந்து விமானம் மூலமாக சென்னைக்கு வந்துள்ளார். இதனையடுத்து பவன் உள்ளிட்டோர் விமான நிலையம் வந்திறங்கிய நண்பரை அழைத்துக் கொண்டு ஆந்திரா நோக்கி சென்றுள்ளனர்.
காரானது பூந்தமல்லி – காட்டுப்பாக்கம் டிரங்க் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த கார், மின்சார வயர்களை பதிப்பதற்காக சாலை நடுவே தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதனைக் கண்ட அந்த வழியாக சென்றவர்கள் காரில் இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர். இதில் காரில் பயணித்த 4 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இந்நிலையில் விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது,