காங்கிரஸ் ஆட்சியில் திட்ட நடைமுறையில் மந்தநிலை நிலவியதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
புனேயில் 11 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத் திட்டங்களை பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், புனேயில் முதற்கட்ட மெட்ரோ திட்டம் நிறைவடைந்ததன் மூலம் போக்குவரத்து பிரச்னை முடிவுக்கு வரும் என நம்பிக்கை தெரிவித்தார்.
புனே மெட்ரோ திட்டம் கடந்த 2008-ஆம் ஆண்டிலேயே உருவான போதிலும், காங்கிரஸின் பொறுப்பற்ற ஆட்சியால் அப்போது நிறைவேறவில்லை என பிரதமர் மோடி விமர்சித்தார்.
இந்தியா நவீனமயமாக்கப்பட வேண்டும், ஆனால் அது நமது அடிப்படை மதிப்புகளின் அடிப்படையில் இருக்க வேண்டும். இந்தியா தனது பாரம்பரியத்தை பெருமையுடன் சுமந்து முன்னேற வேண்டும், வளர வேண்டும்,” என்றும் பிரதமர் தெரிவித்தார்.
“சோலாப்பூருக்கு நேரடி விமான இணைப்பு வழங்கும் வகையில் விமான நிலையத்தை மேம்படுத்தும் பணி நிறைவடைந்துள்ளது. இங்குள்ள டெர்மினல் கட்டடத்தின் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது, பயணிகளுக்கு புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது வித்தோபா பக்தர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும். இப்போது விட்டல் இறைவனை தரிசனம் செய்வதற்காக மக்கள் நேரடியாக சோலாப்பூரை அடைய முடியும் என்றும் பிரதமர் கூறினார்