ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது மெகா ஊழல் நடைபெற்றதாக பாஜக தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா விமர்சித்துள்ளார்.
ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் 5-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, ரோத்தக் பகுதியில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஜெ.பி.நட்டா பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது நில மோசடி நடைபெற்றதாக குற்றம்சாட்டினார்.
காங்கிரஸ் ஆட்சியில் ஏழைகளின் நிலத்தை தொழிலதிபர்கள் அபகரித்ததாக கூறிய ஜெ.பி. நட்டா, படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக வரிசையில் காத்திருக்க நேர்ந்ததாகவும் கூறினார்.