அக்டோபர் 2-ஆம் தேதி பிரதமர் மோடி ஜார்க்கண்ட் செல்கிறார்!
Mar 27, 2026, 02:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அக்டோபர் 2-ஆம் தேதி பிரதமர் மோடி ஜார்க்கண்ட் செல்கிறார்!

Murugesan M by Murugesan M
Sep 30, 2024, 04:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜார்க்கண்டில் ரூ.79,150 கோடி செலவில் தர்த்தி ஆபா பழங்குடியினர் கிராம வளர்ச்சித் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 2- ஆம் தேதி அன்று ஜார்க்கண்ட் செல்கிறார். பிற்பகல் 2 மணியளவில், ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் ரூ.83,300 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, தொடங்கி வைக்கிறார்.

நாடு முழுவதும் உள்ள பழங்குடி சமூகங்களின் விரிவான மற்றும் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்வதற்கான தனது உறுதிப்பாட்டிற்கு ஏற்ப, ரூ.79,150 கோடிக்கும் அதிகமான  செலவில் தர்தி ஆபா பழங்குடியினர் கிராம வளர்ச்சித் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

549 மாவட்டங்கள் மற்றும் 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 2,740 வட்டாரங்களில் 5 கோடிக்கும் அதிகமான பழங்குடியின மக்களுக்கு பயனளிக்கும் சுமார் 63,000 கிராமங்களை இந்த இயக்கம் உள்ளடக்கும். மத்திய அரசின் 17 அமைச்சகங்கள் மற்றும் துறைகளால் செயல்படுத்தப்படும் 25 செயல்பாடுகள் மூலம், சமூக உள்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி, வாழ்வாதாரம் ஆகியவற்றில் முக்கியமான இடைவெளிகளை அடைவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

பழங்குடியின சமூகங்களுக்கான கல்வி உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், ரூ.2,800 கோடி மதிப்பிலான 40 ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

பிரதமரின் பழங்குடியின ஆதிவாசி நியாய மகா (PM-JANMAN) திட்டத்தின் கீழ், ரூ.1,360 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இதில் 1380 கி.மீ-க்கும் அதிகமான சாலைகள், 120 அங்கன்வாடிகள், 250 பல்நோக்கு மையங்கள் மற்றும் 10 பள்ளி விடுதிகள் அடங்கும்.

மேலும், பிரதமர் ஜன்மான் திட்டத்தின் கீழ் 3,000 கிராமங்களில் 75,800-க்கும் மேற்பட்ட குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியின குழுக்களுக்கு (பிவிடிஜி) மின்சார வசதி, 275 நடமாடும் மருத்துவக் குழுக்களை இயக்குதல், 500 அங்கன்வாடி மையங்களை செயல்படுத்துதல், 250 வன் தன் விகாஸ் கேந்திரங்களை நிறுவுதல் மற்றும் 5,550-க்கும் மேற்பட்ட எளிதில் பாதிப்புக்கு ஆளாகக் கூடிய கிராமங்களை ‘நல் சே ஜல்’ மூலம் செறிவூட்டுதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய சாதனைகளையும் அவர் வெளியிடுகிறார்.

Tags: PM Modi to visit Jharkhand on October 2!
ShareTweetSendShare
Previous Post

விருதுநகரில் பால் உற்பத்தியாளர் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்!

Next Post

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி!

Related News

ராமநாதபுரம்:கடற்பகுதியில் பவளப்பாறைகள் அமைக்கும் பணி தீவிரம்!

தமிழகம் முழுவதும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு – நெகிழ்ச்சியுடன் விடைபெற்ற மாணவர்கள்!

சேலம்:போலீசாருக்கும்,நாம்தமிழர் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம்!

சென்னை:ஜாமினில் வெளிவந்த ரவுடி மீது கொலைவெறி தாக்குதல்!

தவெக விழாவில் நடனமாடிய அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்!

அணுமின் நிலையத்தில் சேதம் ஏற்பட்டு- கதிர்வீச்சு கசியக்கூடும் என அச்சம்!

Load More

அண்மைச் செய்திகள்

ராமநவமி விழா கோலாகலம் – அயோத்தி ராமர் கோயிலில் அலைமோதும் கூட்டம்!

நாமக்கல் அருகே தனித்தனி அங்கன்வாடிகள் – அண்ணாமலை சரமாரி கேள்வி!

மதுரை:ஜெனக நாராயணப் பெருமாள் கோயிலில் பாரம்பரிய பரதநாட்டிய நிகழ்ச்சி!

திருச்சி:கோயில் கதவு அடைத்து ஆயிரம் பானையில் பொங்கலிடும் நிகழ்ச்சி கோலாகம்!

ஆந்திராவில் தனியார் பேருந்து, டிப்பர் லாரி மோதிக்கொண்ட விபத்து – 15 பேர் பலி!

பழைய துணி வியாபாரியின் நேர்மையை பாராட்டிய போலீசார்!

இலவசமாக சிகரெட் தர மறுத்த கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு!

சென்னை:திருவொற்றியூரில் ராமநவமியையொட்டி தேரோட்டம் கோலாகலம்!

ஆரோவில் ஆய்வு பயணம் மேற்கொண்ட இந்திய அரசின் உயரதிகாரிகள் !

தொகுதி ஒதுக்கீட்டில் திமுக ஏமாற்றிவிட்டது – காதர் மொகிதீன் வேதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies