நடிப்பின் பிதாமகன் மிதுன் சக்கரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது - சிறப்பு கட்டுரை!
Jul 5, 2025, 08:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நடிப்பின் பிதாமகன் மிதுன் சக்கரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Oct 1, 2024, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரபல பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் குறித்த சிறப்பு தொகுப்பை தற்போது பார்க்கலாம்…

Disco Dancer படத்தில் இடம்பெற்ற அந்த ஒற்றை பாடல் மூலம் நாடு முழுவதும் பிரபலமானவர்தான், நடிகர் மிதுன் சக்ரவர்த்தி.

தெருக்களில் சாதாரணமாக பாடித்திரியும் இளைஞன், எப்படி மிகப்பெரிய டிஸ்கோ டான்சராக மாறுகிறான் என்பதுதான் இந்த படத்தின் கதை. இந்தியாவை தாண்டி, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிலும் இந்த திரைப்படம் வசூலை குவித்தது. அதன்மூலம், உலகளவில் 100 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையை Disco Dancer திரைப்படம் பெற்றது.

மேற்குவங்க மாநிலத்தின் கொல்கத்தாவில் 1950ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி பிறந்தவர், மிதுன்தா என அழைக்கப்படும் மிதுன் சக்ரவர்த்தி. தொடக்கத்தில் இருந்தே சினிமா மீது ஆர்வம் கொண்ட இவர், எஃப்.டி.ஐ.ஐ எனப்படும் இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் இணைந்து தனது நடிப்பு திறமையை மெருகேற்றிக் கொண்டார்.

அதன் பின்னர், “மிரிகயா” என்ற திரைப்படத்தின் மூலம் மிதுன் சக்ரவர்த்தி திரையுலகில் கால்பதித்தார். மிருணாள் சென் இயக்கியிருந்த அந்த படத்தில், சந்தால் என்ற பழங்குடியினத்தை சேர்ந்த கிளர்ச்சியாளராக அவர் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரம் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று தந்தது. மேலும், முதல் திரைப்படத்திலேயே சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைக்கவும் அந்த படம் காரணமாக அமைந்தது.

1980களில் மிதுன் சக்ரவர்த்தி நடித்த அனைத்து படங்களும் மெகா ஹிட்டானது. இதனால், மிகவும் பிசியான நடிகராக உருவெடுத்தார். குறிப்பாக, 1989ஆம் ஆண்டு மட்டும் 19 படங்களில் நடித்து, ஒரே ஆண்டில் அதிக படங்களை நடித்த நடிகர் என்ற லிம்கா சாதனையை அவர் படைத்தார்.இதுவரை 3 தேசிய விருதுகளை வென்றுள்ள அவரின் தனித்துவமான நடனத்திற்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

இந்தி, பெங்காலி, போஜ்புரி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் மிதுன் சக்ரவர்த்தி நடித்துள்ளார். 2016ஆம் ஆண்டு வெளியான “யாகாவாராயினும் நாகாக்க” என்ற படத்தில் நடித்து தமிழ் திரையுலகிலும் அவர் கால் பதித்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு திரிணாமுல் காங்கிரசில் இணைந்த மிதுன் சக்ரவர்த்தி அக்கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், அக்கட்சியில் இருந்து விலகி தற்போது பாஜகவில் இணைந்து பயணித்து வருகிறார்.திரைத்துறையில் அவரது பங்களிப்பை பாராட்டி அண்மையில் அவருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. தற்போது அவருக்கு தாதா சாகேப் பால்கே விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags: Dada Saheb Phalke Lifetime Achievement AwardBollywood actor Mithun Chakrabortyiam a disco dancerwest bengal
ShareTweetSendShare
Previous Post

வேளாண் மின் இணைப்பு வழங்காததற்கு எதிர்ப்பு – ஈரோட்டில் விவசாயிகள் போராட்டம்!

Next Post

ஓர் அழகிய ரயில் பயணம் : பட்டியல் வெளியிட்ட ரயில்வே அமைச்சர் – சிறப்பு கட்டுரை!

Related News

பெண் பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளிகளில் கூட பாதுகாப்பில்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

தந்தையின் சினிமா மோகம் : பூர்வீக சொத்தை இழந்த நகைச்சுவை நடிகர்!

விசிக நிர்வாகிகளால் அபகரிக்கப்பட்ட நிலம் : மீட்டுத் தரக் கோரி மாற்றுத்திறனாளி மகனுடன் மூதாட்டி தர்ணா!

கொக்கைன் போதைப்பொருள் வழக்கில் காங்கிரஸ் நிர்வாகி கைது!

Load More

அண்மைச் செய்திகள்

மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதே சுற்றுப்பயணத்தின் நோக்கம் : எடப்பாடி பழனிசாமி

திமுகவின் திறனற்ற ஆட்சியில் கல்வித்துறை சீரழிந்து வருகிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

திருப்புவனம் காவல்நிலைய மரணம் : பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி-யிடம் நீதிபதி விசாரணை!

புரி ஜெகந்நாதர் கோயில் ரத உற்சவம் கோலாகலம்!

பிரபல யூடியூபர் சுதர்சன் மீது மனைவி வரதட்சணை புகார்!

டெல்லி : 3 பேர் சடலமாக மீட்பு – போலீசார் விசாரணை!

இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லாவின் புதிய புகைப்படங்கள் வெளியீடு!

ஆட்டோ வடிவிலான புதிய ஆடம்பர பை : சமூக வலைத்தள வாசிகள் கிண்டல்!

உத்தரப்பிரதேசம் : இரும்பு கதவு விழுந்து காவலாளி பலி – சிசிடிவி வெளியீடு!

தலாய் லாமாவின் பிறந்தநாள் விழா – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies