ஈரோட்டில் வேளாண் மின் இணைப்புகளை வழங்கக்கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஈரோட்டில் உள்ள மின்வாரிய மண்டல அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள், வேளாண் மின் இணைப்பு திட்டத்திற்கு பணம் செலுத்திய பிறகும் மின் வாரியம் 3 ஆண்டுகளாக காலம் தாழ்த்துவதாக குற்றம் சாட்டினர்.