புதுச்சேரியில் பைக் டாக்சிக்கு தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநர்கள் சட்டசபையை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
தீபாவளிக்கு உதவித் தொகையாக 4 ஆயிரம் ரூபாய் வழங்கவேண்டும், ஆட்டோ தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும், இருசக்கர வாகனம் வாடகைக்கு இயங்குவதை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநர்கள் ஊர்வலம் சென்றனர்.
இதன் காரணமாக புதுச்சேரியின் பெரும்பாலான பகுதிகளில் ஆட்டோக்கள் இயங்காததால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.