மும்பையில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார்.
மகாராஷ்டிரா சட்டப் பேரவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட நிலையில், பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
இதில் மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவீஸ், மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் பவன்குலே உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அப்போது தேர்தல் பணிகள் தொடர்பாக கட்சியினருக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா பல்வேறு ஆலோசனை வழங்கியுள்ளார்.