அகிம்சை புரட்சி நாயகன் மகாத்மா - காந்தி ஜெயந்தி சிறப்பு கட்டுரை!
Aug 15, 2025, 03:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அகிம்சை புரட்சி நாயகன் மகாத்மா – காந்தி ஜெயந்தி சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Oct 2, 2024, 10:33 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாத்மா காந்திக்கு அறிமுகம் தேவையில்லை. ஆனாலும், அவரது வாழ்க்கைப் பாடத்தையும், விடுதலைப் போராட்டத்தில் அவரது மகத்தான பங்களிப்பையும் தியாகங்களையும் அடுத்த தலைமுறையினருக்கு சொல்ல வேண்டியது முக்கியம். பாரத தேசத்தின் தந்தையான, மகாத்மா காந்தியின் 156 வது பிறந்த நாளில் அவர் நினைவைப் போற்றும் விதமாக ஒரு செய்தி தொகுப்பு.

இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு, சத்தியத்தின் வழியில், கத்தியின்றி ரத்தமின்றி விடுதலை வாங்கித் தந்த மாபெரும் தலைவர் மகாத்மா காந்தி. 1869 ஆம் ஆண்டு, அக்டோபர் 2 ஆம் தேதி, குஜராத் மாநிலத்தின் சிறிய ஊரான போர் பந்தரில் கரம்சந்த் காந்தி-புத்லிபாய் தம்பதியருக்கு மகனாக பிறந்தார் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. குஜராத்தில் பிறந்து, தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராகப் பணியாற்றி, இந்தியா முழுவதும் பயணித்து சுதந்திர வேட்கையை இந்தியர்களிடம் ஏற்படுத்தி, ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து அகிம்சை வழியில் போரிட்டார்.

லண்டனில் தனது சட்டப் படிப்பை முடித்த பிறகு, தாதா அப்துல்லா ஜாவேயின் சட்ட விவகாரத்தில் கலந்து கொள்ளத் தென்னாப்பிரிக்காவுக்கு சென்றார். அங்கு, பீட்டர் மரிட்ஸ்பர்க்கில் “வெள்ளையர்கள் மட்டும்” என்று எழுதப்பட்ட பெட்டியில் அமர்ந்ததற்காக ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்டார் காந்தி.

இனப் பாகுபாட்டுக்கு எதிராக, நீதியின் குரலாக தனது வாழ்க்கையை காந்தி மாற்ற இந்த சம்பவமே ஒரு திருப்பு முனையாக அமைந்தது.1915 ஆம் ஆண்டில், மகாத்மா காந்தி இந்திய தேசிய இயக்கத்தின் தலைவரான பின், விடுதலைப் போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றினார்.

உடையைக் கூட ஆயுதமாக்கி அரசியல் களத்தில் போராட முடியும் என்று உலகுக்குக் காட்டிய முதல் மனிதர் காந்திதான். முன்பு செல்வச் செழிப்போடு வாழ்ந்த இந்திய மக்கள், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் கீழ் எப்படி ஏழைகளாக மாற்றப்பட்டார்கள் என்பதைத் தன் உடையின் மூலம் உலகத்துக்குச் சொன்னவர் காந்தி.

அடிமைத்தனத்துக்கு அடிப்படைக் காரணம், மேற்கத்திய உற்பத்தி முறையும் அதனால் விளையும் நுகர்வுக் கலாச்சாரமும்தான் என்பதை காந்தி தன்னுடைய ‘இந்திய சுயராஜ்ஜியம்” நூலில் குறிப்பிட்டு சுதேசி இயக்கத்தை முன்னெடுத்தார்.

சத்தியாகிரகம் என்ற அவரின் தாரக மந்திரம், மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், நெல்சன் மண்டேலா போன்ற உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள தலைவர்களிடமும் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தியது.

1930 ஆம் ‘ஆண்டின் சிறந்த நபர்’ என்று அறிவிக்கப்பட்டதோடு, காந்தியடிகளுக்குப் ‘புனித காந்தி’ என்ற பட்டத்தையும் டைம் இதழ் வழங்கி சிறப்பித்தது.

1942 ஆம் ஆண்டில், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் தொடங்கினார். அந்தக் காலகட்டம் இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியின் கடைசி அத்தியாயமாக அமைந்தது. காந்தியின் ஒத்துழையாமைக்கான அழைப்பு இந்தியா முழுவதும் பரவியது. காந்தியின் “செய் அல்லது செத்து மடி ” என்ற முழக்கம் நாடு முழுவதும் எதிரொலித்தது. மகாத்மா காந்தியின் அகிம்சைப் புரட்சி 1947 ஆம் ஆண்டு இந்தியாவின் விடுதலைக்கு வழிவகுத்தது

1948 ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு, அதே ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதியை காந்தி ஜெயந்தி என்று இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அன்று முதல், காந்தி ஜெயந்தி, இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் தொடர்ந்து கொண்டாடப் பட்டு வருகிறது.

மகாத்மா காந்தியின் அகிம்சை தத்துவம், அமெரிக்காவில் சிவில் உரிமைகள் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் நிறவெறி எதிர்ப்பு வரை உலக நாடுகளின் சுதந்திரப் போராட்டங்களின் உத்திகளை மாற்றி அமைத்தது.

நீதியை அடைவதில் காந்தியின் அகிம்சை வழியே ஒரே வழி என்று உலகம் உணர்ந்து கொண்டதன் விளைவாக, 2007 ஆம் ஆண்டு முதல் காந்தி ஜெயந்தியை சர்வதேச அகிம்சை தினமாக ஐ நா சபை அறிவித்தது. அன்று முதல், மகாத்மா பிறந்த நாளை, சர்வதேச அகிம்சை தினமாக உலகம் கொண்டாடி வருகிறது.

உலகளாவிய மோதல்கள், தீவிரவாதம் மற்றும் அரசியல் அமைதியின்மை அதிகரித்துள்ள இன்றைய சுழலில் மகாத்மா காந்தியின் ‘அகிம்சை’ சமகாலத்திற்கு முக்கியத் தேவையாக உள்ளது. தவறான தகவல்களும், போலிச் செய்திகளும் பெருகி வரும் தற்காலத்தில் மகாத்மா காந்தியின் உண்மையும் நேர்மையும் அதற்கான அர்ப்பணிப்பும் சமூக ஊடகங்களுக்கு ஒரு வழிகாட்டி.

நவீன பொருளாதாரக் கொள்கைகளில் கூட இன்றைக்கும், மகாத்மா காந்தியின்,உள்ளூர் உற்பத்தி மற்றும் தன்னிறைவு என்ற கொள்கையே அடிப்படையாக உள்ளது. காலநிலை மாற்றங்கள், புவி சார் குழப்பங்கள், அச்சமூட்டும் இக்காலத்தில், எளிய வாழ்க்கை மற்றும் நிலையான வளங்களைப் பயன்படுத்துவதற்கான காந்தியின் சிந்தனைகளே நல்ல தீர்வாக நிலையான வாழ்வுக்கு வழி காட்டுகின்றன.

எல்லாவற்றுக்கும் மேலாக, மகாத்மா காந்தி முன்வைத்த “ராமராஜ்யம்” என்பதுதான், ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்பதாகும். அதற்கு அடிப்படை, உண்மை,அகிம்சை,பிரம்மச்சரியம்,களவின்மை,உடைமையின்மை,உடல் உழைப்பு,உணவு கட்டுப்பாடு,அச்சமின்மை,பேதமின்மை, சர்வ சமய நல்லிணக்கம்,மற்றும் சுய சார்பு ஆகியவையே. “எனது வாழ்க்கையே எனது செய்தி” என்று சொன்ன மகாத்மா காந்தியின் கொள்கையான “காந்தியம்” வெறும் தத்துவமல்ல- வாழ்க்கை முறை.

Tags: 156th birth anniversary.Mahatma GandhiFather of India
ShareTweetSendShare
Previous Post

மகாத்மா காந்தியின் உயரிய போதனைகளை பின்பற்றி புகழ் சேர்ப்போம் – அண்ணாமலை

Next Post

தமிழகத்தின் கல்வி, தொழில் புரட்சிக்கு வித்திட்டவர் கர்மவீரர் காமராஜர் அண்ணாமலை புகழாரம்!

Related News

’தலைவன் தலைவி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஹைதராபாத்தில் உரிய ஆவணங்களின்றி, தங்கியிருந்த பாகிஸ்தானை சேர்ந்தவர் கைது!

தேசியக் கொடியை ஏற்றிய முதலமைச்சர் ரங்கசாமி!

சீனா : யாங் லியு புயலால் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நகரம்!

குற்றால அருவிகளில் குளிக்க தடை – சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

ஜம்மு காஷ்மீர் : கிஷ்துவார் மாவட்டத்தில் மேக வெடிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

உலகம் முழுவதும் முதல் நாளில் மட்டும் ரூ.151 கோடியை வசூலித்த கூலி!

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது : பிரதமர் மோடி

இல்லத்தில் தேசிய கொடியை ஏற்றினார் எல். முருகன்!

பெற்றோரிடம் பாசம் காட்டினால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு – பாசமழை பொழிந்துள்ள அசாம் அரசு!

ரஷ்யாவில் அடுக்குமாடி கட்டடம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்திய உக்ரைன்!

அடிப்படை வசதி இல்லாததால் வாழ தகுதியற்றதாக மாறிய கிராமம்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 15 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

மீண்டும் கையேந்தும் அவலம் : IMF- நிபந்தனைகளை நிறைவேற்ற தவறிய பாகிஸ்தான்!

சின்சினாட்டி டென்னிஸ் – சின்னர், அட்மேன் அரையிறுதிக்கு தகுதி!

‘ரூட்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies