மகாத்மா காந்தியின் உயரிய போதனைகளைப் பின்பற்றி, அவருக்குப் புகழ் சேர்ப்போம் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில், ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு எதிராகவும், சமூகத்தில் இருந்த ஏற்றத் தாழ்வுகளுக்கு எதிராகவும், அகிம்சை என்னும் அமைதி ஆயுதம் கொண்டு போராடி, நாட்டுக்காகத் தனது வாழ்வையே அர்ப்பணித்த மகாத்மா காந்தியின் பிறந்த தினம் இன்று.
அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, மகாத்மா காந்தி பிறந்த தினம், உலகம் முழுவதும், சர்வதேச அகிம்சை தினமாகக் கொண்டாடப்படுவது.
அவரது பெருமையைக் கூறும். இந்த காந்தி ஜெயந்தி தினத்தன்று, நேர்மை, பணிவு, தன்னலமற்ற தன்மையுடன், அமைதி மற்றும் அகிம்சையின் ஆற்றலை உலகிற்குப் போதித்த மாமனிதரைப் போற்றுவோம். மகாத்மா காந்தியின் உயரிய போதனைகளைப் பின்பற்றி, அவருக்குப் புகழ் சேர்ப்போம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.