சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் பெயரை தவறாக பயன்படுத்துவோருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் எஸ்.கே. புரொடக்சன்ஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில், எஸ்.கே புரொடக்சன்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் எச்சரிக்கை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், தங்களது நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் எந்தத் திரைப்படங்களுக்கும் கேஸ்டிங் ஏஜென்டுகள் நியமிக்கப்படவில்லை எனவும் இதற்கு மாறாகத் தோன்றும் எந்த செய்திகளையும் நம்ப வேண்டாம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.