IIT சேர்க்கை விவகாரம் : பட்டியலின மாணவருக்கு கை கொடுத்த உச்ச நீதிமன்றம் - சிறப்பு கட்டுரை!
Oct 26, 2025, 11:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

IIT சேர்க்கை விவகாரம் : பட்டியலின மாணவருக்கு கை கொடுத்த உச்ச நீதிமன்றம் – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Oct 3, 2024, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜே இ இ தேர்வில் தேர்ச்சி பெற்றும், குறிப்பிட்ட நேரத்துக்குள் கல்விக் கட்டணம் செலுத்த முடியாததால், IIT சேர்க்கை வாய்ப்பை இழந்த தலித் மாணவருக்கு, அதே IIT-யில் இடம் வழங்குமாறு ,உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் தனித்துவ அதிகாரத்தை பயன்படுத்தி இந்த சிறப்பு மிக்க உத்தரவை தலைமை நீதிபதி சந்திரசூட் பிறப்பித்துள்ளார். இதன் பின்னணியை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு…

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரின் கட்டௌலியில் வசிக்கும் கூலித் தொழிலாளியின் மகனான அதுல்குமாருக்கு, ஐஐடி-யில் படிக்க வேண்டும் என்பது தான் இலக்காக இருந்தது. அதற்காக, தீவிர பயிற்சி எடுத்து ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வையும் எழுதினார் அதுல்குமார்.

தனது பாடப் பிரிவில் மேம்பட்ட JEE தேர்வில், அதுல்குமார், தேசிய அளவில் 1,455 ரேங்க் பெற்றிருந்தார். எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்கில் நான்காண்டு இளங்கலை தொழில்நுட்ப படிப்பிற்காக ஐஐடி தன்பாத்தில் அவருக்கு இடம் கிடைத்தது.

சேர்க்கை கட்டணமான 17 ஆயிரத்து 500 ரூபாயை மொத்தமாக திரட்டுவது என்பது பட்டியலினத்தை சேர்ந்த அதுல்குமார் குடும்பத்தினருக்குப் பெரும் சவாலாக அமைந்தது. எப்படியோ, கிராம மக்களிடம் இருந்தும், தெரிந்தவர்களிடம் இருந்தும் பணம் வாங்கியிருக்கிறார். ஆனாலும், கடைசி நாளான ஜூன் 24ம் தேதி மாலை 5 மணிக்கு பணத்தைச் செலுத்துவதற்குள் IIT இணையத் தளம் மூடப்பட்டு விட்டது.

எவ்வளவு முயன்றும் குறிப்பிட்ட காலத்துக்குள் கட்டணத்தைச் செலுத்த முடியவில்லை. எனினும், தனது கல்விக் கனவை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த விவகாரத்தை, அதுல் குமார், எஸ்.சி/எஸ்.டி கமிஷன் மற்றும் ஜார்க்கண்ட் சட்ட சேவைகள் ஆணையத்திடம் முறையிட்டிருக்கிறார். மூன்று மாத காலம் கடந்த பிறகும் எந்தப் பலனும் கிடைக்காத நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி இருக்கிறார்.

சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தலின் படி, அதுல் குமார், நிவாரணம் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் .

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மனுதாரர் தனது சேர்க்கைக்கான எல்லாவற்றையும் செய்துள்ளதாகவும், இதை இப்படியே விட்டுவிடக் கூடாது என்றும், தன்பாத் ஐஐடியில் குறிப்பிட்ட நேரத்தில் கட்டணம் செலுத்தியிருந்தால் எந்த தொகுப்பில் சேர்க்கப்பட்டிருப்போரோ, அதே தொகுப்பில் மாணவர் அதுல்குமாரை சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளார். மேலும், தலித் மாணவர் அதுல் குமாருக்கு ஆல் தி பெஸ்ட் என்றும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இந்திய அரசியலமைப்பின் 142 வது பிரிவு, நீதியின் நலனுக்காக எந்த உத்தரவையும் பிறப்பிக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கிறது. இந்த உச்சபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தியே, தன்பாத் ஐஐடியில் பிடெக் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படிப்பில் அதுல்குமாரைச் சேர்க்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

ஐஐடியில் தனது இடத்தை மீட்ட தலித் மாணவர் அதுல் குமார், எலெக்ட்ரிகல் துறையில் வெற்றிபெற கடுமையாக உழைக்கப் போவதாகவும், தடம்புரண்ட ரயில் மீண்டும் தண்டவாளத்தை அடைந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

அதுல் குமாரின் இரு சகோதரர்களும் ஐஐடி காரக்பூர் மற்றும் என்ஐடி ஹமிர்பூரில் படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: unable to pay the tuition feessupreme courtiitJEE examinationChief Justice Chandrachud
ShareTweetSendShare
Previous Post

9 நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழா – களைகட்டிய கொலு பொம்மை விற்பனை – சிறப்பு கட்டுரை!

Next Post

நவராத்திரி விழா தொடங்கியது – கோயில்களில் சிறப்பு வழிபாடு!

Related News

இந்தியாவை வெல்லவே முடியாது  : சீண்டுவது பாக்.,கிற்கே ஆபத்து – CIA முன்னாள் அதிகாரி எச்சரிக்கை!

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

எல்.ஐ.சி மீதான நம்பிக்கையை குலைக்க சதியா? – Deep State-ன் ஊதுகுழலா காங்கிரஸ்?

குடியேறிகளில் இந்தியர்கள் சிறப்பானவர்கள் – அமெரிக்க பொருளாதார நிபுணர் பாராட்டு!

நெருக்கடியின் விளிம்பில் வங்கதேசம் : புதிய இஸ்லாமிய ராணுவம் – தெற்காசிய நாடுகளுக்கு ஆபத்து?

சீன “சிப்”-களுக்கு திடீர் கட்டுப்பாடு : பிரபல கார் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்!

Load More

அண்மைச் செய்திகள்

பெஷாவரை நெருங்கும் TTP – தாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்!

 எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் – ஆய்வில் புது தகவல்!

“4,395 பேருக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார்கள்” – கத்தோலிக்க திருச்சபைகளில் புயலை கிளப்பிய அறிக்கை!

“மாரி”யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை முதலமைச்சர் ஸ்டாலின் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் : மருத்துவ கழிவுகளால் நஞ்சான பாசன குளம்!

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

குஜராத் : மனிதர்களை சீண்டாமல் சென்ற பெண் சிங்கம் – வீடியோ காட்சி வைரல்!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

ஆசியான் நாடுகளுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கிறது – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies