ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் இன்று துவங்குகிறது.
20-ம் தேதி வரை இரு பிரிவுகளாக நடைபெறும் போட்டியில் ஏ-பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, உள்ளிட்ட 5 அணிகளும், பி- பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் உள்ளிட்ட 5 அணிகளும் பங்கேற்கின்றன.
மாலை 3.30 மணிக்கு சார்ஜாவில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் வங்காளதேசம்- ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தனது முதல் போட்டியில் நாளை நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.