தென்னாப்பிரிக்காவில் கடும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு கடற்கரை நகரமான டர்பன், குவாசுலு – நடால் உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக பனிப்பொழிவு காணப்படுகிறது. இதன் காரணமாக சாலைகள் உள்ளிட்ட பார்க்கும் இடமெல்லாம் பனியாக காணப்படுகிறது.
அவற்றை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் திணறினர். பொதுமக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கியுள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.