ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் அமைந்துள்ள மாதா வைஷ்ணவி தேவி கோயிலில் நவராத்திரியின் முதல் நாளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
கடல் மட்டத்தில் இருந்து 5,200 அடி உயரத்திலும், கத்ராவின் திரிகுடா மலைத்தொடரின் மேல் 1,700 மீட்டர் உயரத்திலும் மாதா வைஷ்ணவி தேவி கோயில் அமைந்திருக்கிறது.
இந்தக் கோயிலிலுக்கு ஆண்டுதோறும் 8 மில்லியன் பக்தர்கள் வருகை தருகின்றனர். தற்போது பண்டிகையை காலத்தையொட்டி வைஷ்ணவி தேவி கோயில் விழாக் கோலம் பூண்டுள்ளது.