மூலோபாயத்துடன் கூடிய நாடுகளுடன் வலுவான விநியோகச் சங்கிலியை உருவாக்குவதன் மூலம் இந்தியாவின் கட்டமைப்பு சக்தியை அதிகரிக்க முடியும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் மூன்றாவது கௌடில்யர் பொருளாதார மாநாடு, இன்று முதல் வரும் 6ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த ஆண்டு மாநாடு, பசுமை மாற்றத்திற்கு நிதியளித்தல், புவிசார் பொருளாதார பாதிப்பு மற்றும் வளர்ச்சிக்கான தாக்கங்கள், பின்னடைவைப் பாதுகாப்பதற்கான கொள்கை நடவடிக்கைக்கான கோட்பாடு போன்ற கருப்பொருள்களில் கவனம் செலுத்தும்.
இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மூலோபாயத்துடன் கூடிய நாடுகளுடன் வலுவான விநியோகச் சங்கிலியை உருவாக்குவதன் மூலம், இந்தியாவின் கட்டமைப்பு சக்தியை அதிகரிக்க முடியும் என தெரிவித்தார்.
6-ஆம் தேதி வரை நடைபெறும் மாநாட்டில் இந்திய மற்றும் சர்வதேச அறிஞர்கள், கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோர் இந்திய பொருளாதாரம் மற்றும் உலகளாவிய பொருளாதாரங்கள் எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கின்றனர்.
அடுத்தபத்தாண்டுகளில் சாமானியர்களின் வாழ்க்கைத் தரம் மிகப்பெரிய உயர்வை காணும் என்றும், அடுத்த 5 ஆண்டுகளில் தனிநபர் வருமானம் இரட்டிப்பாகும் என்றும நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.