விமானப்படை அபார வளர்ச்சி கண்டு வருவதாக இந்திய விமானப்படை கமாண்டோ மற்றும் விமானப்படை சாகச நிகழ்ச்சி இயக்குநர் ஹிரேந்தர் தெரிவித்துள்ளார்.
தமிழ் ஜனம் செய்திகளுக்கு அவர் அளித் பிரத்தியேக பேட்டியில் கூறியுள்ளதாவது: ” 21 வருடங்களுக்குப் பிறகு மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதில் 52 விமானங்கள் பங்கேற்கின்றன மெரினா கடற்கரை பார்ப்பதற்கு அழகாகவும் பிரம்மாண்டமாகவும் இருப்பதால் விமான சாகச நிகழ்ச்சிக்கு தேர்ந்தெடுத்துள்ளோம். மெரினாவிலிருந்து விமான சாகசங்களை தெளிவாக பார்க்கலாம்.
பல விமானப்படை வீரர்களின் முயற்சி, கடின உழைப்போடு சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. சென்னை மக்கள் குடும்பத்தோடு வந்து சாகச நிகழ்ச்சியை பார்க்க வேண்டும்.
21 ஆண்டுகளுக்கு முன்பு இளைஞனாக விமானப்படையில் சேர்ந்த அஜய் தசரதி இன்று சூரிய கிரன் குழுவின் தலைவனாக மாறி அவருடைய தலைமையில் சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இவையெல்லாம் இன்றைய இளைஞர்களுக்கு உந்துதலையும் இளைஞர்கள் விமானப்படையில் சேர்வதற்கு ஆர்வத்தையும் அளிக்கும். இந்திய விமானப்படை உலக நாடுகளில் நான்காவது பெரிய விமானப்படை. இந்திய விமானப்படையின் வளர்ச்சியினால் மத்திய அரசு உலக நாடுகளில் பெருமை அடைந்து வருகிறது என தெரிவித்தார்.