இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், கொழும்பில் அந்நாட்டின் அதிபராக பதவியேற்றுள்ள அநுர குமார திசாநாயகேவை சந்தித்து பேசினார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், குடியரசு தலைவர் திரெளபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி சார்பில் இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயகேவுக்கு வாழ்த்து தெரிவித்ததாக குறிப்பிட்டார்.
மேலும், இருநாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு, இருதரப்பு உறவை வலுப்படுத்துவது தொடர்பாக இலங்கை அதிபருடன் ஆலோசனை நடத்தியதாக அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.