சென்னையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெங்களூருவை சேர்ந்த 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
வெங்கடேஸ்வரா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் போதைப்பொருட்கள் விற்கப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ராஜேஷ் குமார், சாய் பாலாஜி ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, பெங்களூருவில் உள்ள தனது நண்பர் மூலமாக போதைப்பொருளை வாங்கி அதனை ராஜேஷ் சென்னையில் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து ராஜேஷ் கொடுத்த தகவலின்பேரில் அருண், ரிஸ்வான் உள்ளிட்ட 5 பேரை கைது செய்த தனிப்படையினர், அவர்களிடம் இருந்து 42 கிராம் மெத்தபெட்டமைன், 13 போதை ஊசிகள், இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.