வள்ளலாரின் சமுதாய சீர்திருத்தங்களை போற்றி வணங்குவோம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், “அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி” சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்க சங்கம் ஒன்றை தோற்றுவித்து, சமுதாயத்தில் அனைத்து மக்களும் சமம் என்றும், சாதிய பாகுபாடுகளை கடுமையாக எதிர்த்தவருமான வள்ளலார் என்று நம் அனைவராலும் அழைக்கப்படுகின்ற இராமலிங்க அடிகளாரின் பிறந்த தினம் இன்று. ‘
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்றவர், பசி என்று வருவோர்க்கு 3 வேளையும் உணவளிக்கத் துவங்கினார். இன்றளவும் வடலூர் செல்வோர்க்கு உணவளிக்கப்பட்டு வருகிறது.
‘எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க’ என்பதையே தனது கொள்கையாக கொண்டு வாழ்ந்த வள்ளலார் அவர்களின் இந்த பிறந்த தினத்தில், அவர்தம் எண்ணங்களை பிரதிபலிக்கின்ற வகையில் வாழ்ந்திடுவோம். சமுதாய நலனில் அவர் ஏற்படுத்திய சீர்திருத்தங்களை நினைவு கூர்ந்து போற்றி வணங்கிடுவோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.