கோவை புறநகர் பகுதிகளில், தனியார் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள விடுதிகளில் காவல்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
கோவில்பாளையம், சரவணம்பட்டி, அத்திப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தனியார் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக்கேயன் உத்தரவின்பேரில், மாணவர்கள் தங்கும் விடுதிகளில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
கல்லூரி மாணவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துகிறார்களா என்பதை கண்டறியும் வகையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது சில மாணவர்களின் அறையில் இருந்து உயர்ரக போதைப்பொருள் கைபற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.