நாகையில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் கோயில் மதில் சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானதில், அவர் நல்வாய்ப்பாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
அதிமுக முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ்.மணியன், கிழக்கு கடற்கரை சாலை வழியாக திருப்பூண்டி அருகே காரில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மேல் மோதாமலிருக்க, ஓட்டுநர் காரை திருப்பியபோது அவரது கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த கோயில் மதில் சுவற்றில் மோதி கார் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரின் முன்பகுதி சேதமடைந்த நிலையில், ஓ.எஸ்.மணியன் மற்றும் கார் ஓட்டுநர் சிறு காயங்களுடன் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.