சென்னை மதுரவாயலில், நடிகை சோனா வீட்டில் கத்தியுடன் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திரைப்பட நடிகை சோனா, மதுரவாயல் பகுதியில் வசித்து வருகிறார். நேற்று வீட்டின் முன்பு நாய் குரைக்கும் சத்தம் கேட்டு வெளியே சென்று பார்த்த அவர், ஏ.சி யூனிட்டை இருவர் கழற்ற முயற்சிப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டுள்ளார்.
அப்போது நடிகை சோனாவை அவ்விருவரும் கத்தியைக் காட்டி மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மதுரவாயல் போலீசார், சம்பவ இடத்திலுள்ள சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில், நடிகை சோனா வீட்டில் கொள்ளையடிக்க முயன்றதுடன் அவரை கத்தியைக் காட்டி மிரட்டிய அதே பகுதியைச் சேர்ந்த சிவா மற்றும் லோகேஷ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.