தமிழகம் முழுவதும் 57 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு இன்று நடைபெறுகிறது.
விஜயதசமி தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் நாடு முழுவதும் அணிவகுப்பு நடத்துவது வழக்கம்.
இந்த ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு தமிழகத்தில் 57 இடங்களில் இன்று நடைபெறுகிறது.
சென்னை, கோவை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட 57 இடங்களில் நடைபெறும் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர்.