கர்நாடக மாநிலம் பெங்களூரு தேசிய பூங்காவில் பேருந்தின் ஜன்னல் மீது சிறுத்தை பாய்ந்ததால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
பெங்களூருவில் உள்ள பன்னர்கட்டா தேசிய உயிரியல் பூங்காவில் கடந்த ஜூன் மாதம் சிறுத்தை சஃபாரி தொடங்கப்பட்டது. இதன் மூலம், பேருந்தில் பயணித்தபடி வனவிலங்குகளை மிக அருகில் காண முடியும்.
அதன்படி பூங்காவில் பார்வையாளர்களுடன் சென்ற பேருந்தின் ஜன்னல் மீது எதிர்பாராத விதமாக சிறுத்தை ஒன்று ஏற முயன்றது. இதனால் அதிர்ச்சிக்குள்ளான பார்வையாளர்கள், அச்சத்தில் கூச்சலிட்டனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.