டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசினார்.
பிரதமர் மோடி உடனான இந்த சந்திப்பின்போது ஆந்திர மாநிலத்திற்கான முக்கிய வளர்ச்சி திட்டங்கள் குறித்து முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு விவாதித்தார்.
நிலுவையில் உள்ள வெள்ள நிவாரண நிதி, முக்கிய ரயில்வே திட்டங்கள், விசாகப்பட்டினத்தை தலைமையிடமாக கொண்டு ரயில்வே மண்டலம் உருவாக்குவது, மாநிலத்தின் தலைநகரான அமராவதிக்கு உலக வங்கி நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடர்பாக பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு விவாதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
















