மோதிப்பார்...நாங்க ரெடி...ஏவுகணைகளை சிதறடிக்கும் இந்தியாவின் "அயர்ன் டோம்" - சிறப்பு கட்டுரை!
Jul 20, 2025, 07:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மோதிப்பார்…நாங்க ரெடி…ஏவுகணைகளை சிதறடிக்கும் இந்தியாவின் “அயர்ன் டோம்” – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Oct 8, 2024, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரான் ஏவிய பலநூறு ஏவுகணைகளை அயர்ன் டோம் உள்ளிட்ட வான்வழி பாதுகாப்பு அமைப்புகளின் மூலம் இஸ்ரேல் இடைமறித்து அழித்துள்ளது. இஸ்ரேல் போன்று எதிரி நாடுகளின் ஏவுகணைத் தாக்குதல்களைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்புகள் இந்தியாவிடம் உள்ளதா? ஏவுகணை சவால்களை எதிர்கொள்ள இந்தியா எந்த அளவு தயாராக உள்ளது? என்பதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

இஸ்ரேல் மட்டுமல்ல, இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளும், எதிரிகளிடமிருந்து அதன் சொந்த புவிசார் அரசியல் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன. இஸ்ரேலின் மீதான ஈரானின் ஏவுகணை தாக்குதல், அனைத்து நாடுகளுக்கும் ஒரு எச்சரிக்கையாகவே அமைந்துள்ளது.

இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு குறுகிய தூரத்திலிருந்து, பூமியின் வளிமண்டலத்திற்கு வெளியே பறக்கும் ஏவுகணைகளுக்கு எதிராக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் அயர்ன் டோம் மிகவும் பிரபலமானதாகும்.

அயர்ன் டோம் தவிர, டேவிட் ஸ்லிங், அரோ 2 மற்றும் 3, மற்றும் அயர்ன் பீம் ஆகிய பாதுகாப்பு அமைப்புக்களும் இஸ்ரேலிடம் உள்ளது.

புவி சார் அரசியல் சூழலில், , இந்தியாவும் அதன் அண்டை நாடுகளிடமிருந்து பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்கிறது, இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக சீனாவும்,பாகிஸ்தானும் உள்ளன. இரண்டு நாடுகளும், ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் உட்பட பல மேம்பட்ட ஏவுகணை திறன்களைக் கொண்டுள்ளன.

ராணுவத்தை நவீனமயமாக்கி வரும் சீனா, வலுவான ஏவுகணை ஆயுதக் களஞ்சியத்தை உருவாக்கி வைத்துள்ளது. அதன் மூலம், இந்தியாவின் வடகிழக்கில் உள்ள தென் சீனக் கடலின் கரையோர மாநிலங்களை அச்சுறுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.

DF-21 மற்றும் DF-26 ஏவுகணைகள் சீனாவிடம் உள்ளன. இடைநிலை தூர பாலிஸ்டிக் ஏவுகணைகள் (IRBMs) இந்திய எல்லைக்குள் ஆழமான இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டவை ஆகும். இதன் மூலம், இந்திய கடற்படை தளங்களைக் குறிவைக்க முடியும் என்று கூறப்படுகிறது.

700 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் சென்று தாக்கக் கூடிய பாபர் க்ரூஸ் ஏவுகணைகள் பாகிஸ்தானிடம் உள்ளன. இந்த ஏவுகணைகள் அணு ஆயுதங்களை வீசக்கூடிய திறன் கொண்டவை ஆகும்.

மேலும், நடுத்தர முதல் நீண்ட தூரம் வரை சென்று தாக்கும் கௌரி மற்றும் ஷாஹீன் பாலிஸ்டிக் ஏவுகணைகளும் பாகிஸ்தானிடம் உள்ளன. இதனால், இந்தியாவின் முக்கிய நகரங்கள் மற்றும் நாடெங்கும் உள்ள ராணுவ தளங்களையும் தாக்க முடியும் என்று கூறப்படுகிறது.

இந்தியாவின் மேற்கு எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் பாகிஸ்தான், சீனாவுடன் நட்புறவு பேணுவது இந்தியாவுக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில், உள்நாட்டில் உருவாக்கப்பட்ட அமைப்புகள் மட்டும் இல்லாமல், வெளிநாட்டு தொழில்நுட்பத்துடன் கூடிய மேம்பட்ட ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்குவதற்கும் இந்தியா முதலீடு செய்து வருகிறது.

பிருத்வி ஏர் டிஃபென்ஸ் மற்றும் அட்வான்ஸ்டு ஏர் டிஃபென்ஸ் ஆகியவை இந்தியாவின் உள்நாட்டு ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளாகும். வெவ்வேறு உயரங்களில் உள்ள பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறிக்க இவை உருவாக்கப்பட்டுள்ளன.

மேலும், ஆகாஷ் ஏவுகணை அமைப்பு இந்தியாவிடம் உள்ளது. 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வான்வழி இலக்குகளை இடைமறித்து தாக்கக்கூடியதாகும். இந்த ஆகாஷ் ஏவுகணை அமைப்பு, ஒரு தரையிலிருந்து வான் ஏவுகணை அமைப்பாகும்.

அண்மையில், பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகளின் வான்வழி தாக்குதலுக்கு எதிராக S-400 வான்வழி பாதுகாப்பை ரஷ்யா, இந்தியாவுக்கு வழங்கி இருக்கிறது. சுமார் 400 கிலோமீட்டர் வரையிலான 30 கிலோமீட்டர் உயரத்தில் வரும் ஏவுகணைகளை தடுக்க முடியும் என்று கூறப்படுகிறது. மேலும், S-400 வான்வழி பாதுகாப்பு , ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளையும் அழிக்கும் திறன் கொண்டவை ஆகும்.

2021ம் ஆண்டில், பராக்-8 என்ற வான்-ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை இந்திய விமானப்படை உருவாக்கியது. Barak-8, 70 கிலோமீட்டர் தூரம் வரை, எதிரியின் போர் விமானங்கள், ஏவுகணைகள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் ஆகியவற்றைத் தடுக்கும். இதனை,இந்திய விமானப் படை பாதுகாப்பில் ஒரு “கேம் சேஞ்சர்” என்று தெரிவிக்கின்றனர்.

ரஷ்யா போன்ற நாடுகளிடமிருந்து வாங்கிய நவீன பாதுகாப்பு அமைப்புகளுடன் இந்தியாவின் ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்பு முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலைப் போலவே, இந்தியாவும் பல அடுக்கு பாதுகாப்பு அமைப்புக்களைக் கொண்டுள்ளது. வெவ்வேறு அமைப்புகள் வெவ்வேறு வரம்புகள் மற்றும் உயரங்களை உள்ளடக்கியதாக இந்தியாவும் வைத்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில், மேம்பட்ட ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்குவதில் , இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் கண்டுள்ளது.

Tags: Iranmissile attackBeam defense systems.
ShareTweetSendShare
Previous Post

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கவுண்டமணியிடம் ஒப்படைக்கப்பட்ட நிலம்!

Next Post

ஜெய்சங்கர் பயணம் எதிரொலி – இலங்கைக்கு கூடுதல் சலுகை – சிறப்பு கட்டுரை!

Related News

வான்வழி போரை வசமாக்கும் இந்தியா : சீனா, அமெரிக்காவை மிஞ்சும் காண்டீபம் ஏவுகணை!

சேலம் ஆடிட்டர் ரமேஷ் நினைவு தினம் – பாஜக சார்பில் ரத்த தான முகாம்!

சர்ச்சை பேச்சின் பின்னணி – காங்கிரஸை கை கழுவ திமுக திட்டமா?

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – சிறுமுகை அருகே இயந்திர படகு போக்குவரத்து தொடக்கம்!

15,000 அடி உயரத்தில் சோதனை – இலக்கை தூளாக்கிய அஸ்திரங்கள்! : பாகிஸ்தான், சீனாவை மிரளவிட்ட இந்தியா!

வரதட்சணை கொடுமை வழக்கு – தலைமைக்காவலர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

மீனவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் – இபிஎஸ் உறுதி!

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் குருபூஜை விழா!

அரசு கல்லூரிகளில் உள்ளகப் புகார் குழுக்களை உடனடியாக அமைக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

ஈ.வெ.ரா. பெயரில் கட்டப்பட்டு வரும் நூலக நுழைவு வாயிலில் திருஷ்டி படம்!

கும்மிடிப்பூண்டி அருகே 13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை!

சேலம் ஆடிட்டர் ரமேஷ் நினைவு தினம் – உருவ படத்திற்கு நயினார் நாகேந்திரன் மரியாதை!

மயிலாடுதுறை காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட் – மாவட்ட நீதிமன்றம் உத்தரவு!

வேலூரில் இலங்கை தமிழர் முகாமில் உள்ளவர்களுக்கும் கிராமத்தினருக்கும் இடையே மோதல்!

மயிலாடுதுறையில் மதுவிலக்கு DSP விவகாரம் – முதல்வர் தலையிட அண்ணாமலை வலியுறுத்தல்!

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பகுதி நேர ஆசிரியர்களுக்கு திமுக அரசின் பதில் என்ன? – அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies