சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கோடம்பாக்கத்தில் உள்ள நிலம் நடிகர் கவுண்டமணியிடம் ஒப்படைக்கப்பட்டது.
கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் நடிகர் கவுண்டமணிக்கு சொந்தமாக 22 ஆயிரத்து 700 சதுரஅடி நிலம் உள்ளது. அந்த இடத்தில் வணிக வளாகம் கட்ட ஸ்ரீ அபிராமி பவுண்டேசன் என்ற நிறுவனம் ஒப்பந்தம் போட்டது.
ஆனால், பல மாதங்களாகியும் வணிக வளாகம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை. எனவே, நிலத்தை திரும்ப வழங்க உத்தரவிடக்கோரி, கவுண்டமணி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த .நீதிமன்றம், நிலத்தை கவுண்டமணியிடம் ஒப்படைக்க ஸ்ரீ அபிராமி பவுண்டேசன் நிறுவனத்திற்கு கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி கவுண்டமணியிடம் நிலம் ஒப்படைக்கப்பட்டது.