திமுக அரசை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்
சென்னை ராயபுரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு உள்ளிட்ட திமுக அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக்க கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்துகொண்டனர்.
சேலத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் 60 வார்டுகளில் இருந்தும் திரளான அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். சேலம் அதிமுக மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் மற்றும் முன்னாள் அமைச்சர் செம்மலை முன்னிலையில் இந்த மனித சங்கிலி போராட்டமானது நடைபெற்றது. அப்போது சொத்து வரி உயர்வை கண்டித்தும், மின் கட்டண உயர்வை கண்டித்தும் அதிமுகவினர் கோஷங்களை எழுப்பினர்.
திருவள்ளூரில் அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் பலராமன் தலைமையில் மனித சங்கிலி நடைபெற்றது. அப்போது திமுக ஆட்சியில் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாகவும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் கூறி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
காஞ்சிபுரத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் தலைமையில் மனித சங்கிலி போராட்நடைபெற்றது. இதில், அதிமுக மாவட்ட பொருளாளர், எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் உள்ளிட்ட திரளான அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டு திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.