ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் இண்டி கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. முதல்கட்ட தேர்தல் செப்டம்பர் 18-ந்தேதியும், 2-வது கட்ட தேர்தல் செப்டம்பர் 25-ந்தேதியும் நடைபெற்றது. 3-வது கட்ட தேர்தல் கடந்த 1-ந்தேதி நடைபெற்று முடிந்தது.
இதில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்படுகின்றன. இதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்நிலையில், jnc ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி 43 இடங்களிலும், காங்கிரஸ் 7 இடங்களிலும், பாஜக 28. பிடிபி 2., இதர கட்சிகள் 10 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றன.