காஷ்மீர் முதல்வராக தேசிய மாநாட்டு கட்சியின் செயல் தலைவர் உமர் அப்துல்லா பதவியேற்கவுள்ளார் என்று அக்கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
தேசிய மாநாட்டு கட்சியின் செயல் தலைவரும், முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா, தான் போட்டியிட்ட பட்காம் மற்றும் காந்தர்பால் ஆகிய இரண்டு இடங்களிலும் அதிக வாக்குகள் பெற்றுள்ளார்.
பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை கைப்பற்றியிருப்பதாலும், தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைக்கவுள்ளது.