ஜம்மு-காஷ்மீரில் அசத்தல்! : பாஜகவின் ஒரே பெண் வேட்பாளர் வெற்றி பெற்றது எப்படி?
Mar 16, 2026, 07:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஜம்மு-காஷ்மீரில் அசத்தல்! : பாஜகவின் ஒரே பெண் வேட்பாளர் வெற்றி பெற்றது எப்படி?

Murugesan M by Murugesan M
Oct 10, 2024, 12:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீர் சட்ட மன்றத் தேர்தலில் கிஷ்வார் தொகுதியில் முதல்முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார் பாஜகவின் வேட்பாளர் ஷகுன் பரிஹார். இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் தொகுதியில் வாகை சூடியிருக்கும் ஷகுன் பரிஹார் பற்றி ஒரு செய்தி தொகுப்பு.

370வது சட்டப் பிரிவு நீக்கப்பட்ட பிறகு , முதன்முறையாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 90 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. 29 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்ற நிலையில், முக்கிய வெற்றியாக கிஷ்த்வார் தொகுதியில் ஷகுன் பரிஹாரின் வெற்றி அமைந்திருக்கிறது.

ஜம்மு காஷ்மீர் தேர்தல் வரலாற்றில், கிஷ்த்வார் தொகுதி தேசிய மாநாட்டுக் கட்சியின் கோட்டையாக இருந்து வந்தது. 2014ம் ஆண்டு முதன்முறையாக பாஜக வேட்பாளர் சுனில் ஷர்மா இத் தொகுதியில் வெற்றி பெற்றார். இப்போது மீண்டும் பாஜக இதே தொகுதியைத் தக்க வைத்திருக்கிறது.

ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில், தனது முதல் பிரச்சாரக் கூட்டத்தில், தீவிரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவரும் பாஜகவின் உறுதிக்கு உதாரணமாகவே ஷகுன் பரிஹார் பாஜகவின் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

பிரதமரின் உறுதிக்கு ஆதரவாக, கிஷ்த்வார் தொகுதி மக்கள் ஷகுன் பரிஹாரை வெற்றிப் பெற வைத்திருக்கிறார்கள்.

தன்னை எதிர்த்து போட்டியிட்ட மூத்த தேசிய மாநாட்டுத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சஜ்ஜாத் அகமது கிச்லூவை விட 521 வாக்குகள் அதிகமாக பெற்று ஷகுன் பரிஹார் வெற்றி வாகை சூட்டியிருக்கிறார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஜம்மு காஷ்மீரில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலுக்கு முன்பாக, ஷகுன் பரிஹாரின் தந்தை அஜித் பரிஹார் மற்றும் அவரது மாமா அனில் பரிஹார் ஆகியோர் 2018ம் ஆண்டு, நவம்பர் ஒன்றாம் தேதி, இஸ்லாமிய தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர்.

எலெக்ட்ரானிக்ஸ் துறையில் முனைவர் பட்டம் பெற்ற 29 வயதான ஷகுன் பரிஹார், எலக்ட்ரிக்கல் பவர் சிஸ்டம்ஸ் பிரிவில் எம்டெக் பட்டம் பெற்றுள்ளார். தற்போது, ஜம்மு காஷ்மீர் அரசுப்பணித் தேர்வுக்கும் தயாராகி கொண்டிருக்கிறார்.

கல்விப் பணிகளில் கவனம் செலுத்திவரும் ஷகுன் பரிஹாருக்கு அரசியலில் சேரும் எண்ணம் இல்லாமல் இருந்தது. சமூகத்திற்கான கடமை உணர்வு மற்றும் தேசப்பணியில் அவரது குடும்ப மரபு ஆகியவையே அவரை அரசியலில் சேர வைத்திருக்கிறது.

தனது குடும்பம் உட்பட தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் தீவிரவாதத்துக்கு எதிராக களம் இறங்கினார் ஷகுன் பரிஹார்.

இஸ்லாமியர்கள் அதிகமான வாழும் கிஷ்த்வார் தொகுதியில், பாதுகாப்பற்ற நிலையில் இந்துக்கள் சிறுபான்மையினராக உள்ளனர். முஸ்லீம்களுக்கும் இந்துகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கவும், ஒற்றுமை உணர்வை வளர்க்கவும் விரும்பிய பாஜக, இத்தொகுதியில், தீவிரவாதத்துக்குப் பலியான குடும்பத்திலிருந்து ஷகுன் பரிஹாரை வேட்பாளராக்கியது.

ஜம்மு காஷ்மீரில் அமைதி,முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்காக எல்லோரும் ஒன்றாக பாடுபடவேண்டும் என்பதையே தனது பிரச்சாரமாக்கினார் ஷகுன் பரிஹார்.

இப்போது வெற்றி பெற்ற நிலையிலும், தீவிரவாதத்துக்கு எதிராக போராடி நாட்டைப் பாதுகாப்பதில் உயிர் தியாகம் செய்த அனைவருக்கும் தனது நன்றியை ஷகுன் பரிஹார் தெரிவித்திருக்கிறார்.

ஜம்மு மற்றும் காஷ்மீர் தேர்தலில் பாஜக நிறுத்திய ஒரே பெண் வேட்பாளரான ஷகுன் பரிஹாரின் வெற்றி காஷ்மீர் மக்கள் தேசிய வாதத்தை விரும்புகின்றனர் என்பதைக் காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

வரலாற்று சவால்களைக் கருத்தில் கொண்டு, ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்புக்கு பணியாற்ற போவதாக ஷகுன் பரிஹார் தெரிவித்துள்ளார்.

Tags: Crazy in Jammu and Kashmir! : How did BJP's only woman candidate win?
ShareTweetSendShare
Previous Post

இஸ்ரேலை மீண்டும் தாக்குவோம்! – ஹிஸ்புல்லா எச்சரிக்கை!

Next Post

சென்னை மெட்ரோவின் 3-ம் வழித்தட சுரங்கப்பணிகள் நிறைவு! – மெட்ரோ நிர்வாகம்

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies