மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்க வேண்டுமென மகாராஷ்டிரா அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக ரத்தன் டாடா மறைவையொட்டி, அமைச்சரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேறியது. மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் துணை முதலமைச்சர்கள் தேவேந்திர ஃபட்னாவீஸ், அஜித் பவார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
















