பண்டிகை தினங்களையொட்டி உதகை – குன்னூர் மற்றும் உதகை – கேத்தி இடையே சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
அக்டோபர் 12 மற்றும் 13ம் தேதிகளிலும், நவம்பர் 2 மற்றும் 3ம் தேதிகளிலும் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி குன்னூர் உதகை இடையே ஒரு சிறப்பு மலை ரயிலும், உதகை – கேத்தி இடையே மற்றொரு சிறப்பு ரயிலும் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இந்த இரு ரயில்களிலும் முதல் வகுப்பில் 80 இருக்கைகளும், 2ம் வகுப்பில் 130 இருக்கைகளும் இடம்பெற்றிருக்கும்.
மேலும், இந்த இரு ரயில்களிலும் சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்கலாம் எனவும் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.