அமெரிக்காவில் ஃபுளோரிடா மாகாணத்தை மில்டன் புயல் தாக்கியபோது அந்த வழியாக சென்ற விமானம் புயலில் சிக்கிக் கொண்டது.
புளோரிடா மாகாணத்தை மில்டன் புயல் புரட்டி போட்டதில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. இந்நிலையில், மில்டன் புயலை ஆய்வு செய்த அந்நாட்டு விஞ்ஞானிகள் குழு விமானத்தில் பயணித்தபோது 270 கிலோமீட்டர் வேக சூறைக்காற்றில் விமானம் சிக்கி, திக்குமுக்காடியது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.