கோவில்பட்டி அருகே கழிவுநீர் அகற்றும் விவகாரத்தில் சாதிய ரீதியதாக திட்டி, தன்னை தாக்கிய கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி மன்ற துணை தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள அகிலாண்டபுரம் ஊராட்சி மன்ற துணை தலைவர் பால்ராஜ் கிராமத்தில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றுவது தொடர்பாக ஊராட்சி ஒன்றிய அலுவலருடன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, கிராம நிர்வாக அலுவலர் கருப்பசாமி மற்றும் பால்ராஜ் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ஊராட்சி மன்ற துணை தலைவர் பால்ராஜ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தகராறு தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தன்னை சாதிய ரீதியாக பேசிய கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீசார் காலம் தாழ்த்தி வருவதாக குற்றம்சாட்டினார்.