திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அடுத்துள்ள கூக்கால் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களிலும், குடிநீர் குட்டைகளிலும் மனிதக் கழிவு நீர் கலக்கிறது என்றும் புகார் எழுந்துள்ளது.
இங்குள்ள ஏரி மற்றும் நீர்வீழ்ச்சிகளை காண்பதற்காக வரும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் பாலித்தீன் பைகள் மற்றும் மது பாட்டில்களை வீசிவிட்டு செல்கின்றனர். அவை மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டு விவசாய நிலத்தில் தேங்கி விடுவதாகவும், அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.