கடலூர் மாநகராட்சி முறையாக ஊதியம் வழங்குவதில்லை எனக் கூறி அங்கு பணிபுரியும் 300க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளில் 300க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், இவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் மாநகராட்சி நிர்வாகம் முறையாக ஊதியம் வழங்குவதில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பணிகளை புறக்கணித்து தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.