ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமியையொட்டி சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால், தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கோயம்பேடு பேருந்து நிலையம், மதுரவாயல் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் பயணிகளின் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவிலேயே காணப்பட்டது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்த பின்னர், பேருந்து கிடைக்காமல் மக்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களின் காரணமாக பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததாக கூறப்படுகிறது.
இதனால் பேருந்துகள் அனைத்தும் காலியாக செல்லும் நிலையிலேயே காணப்பட்டன.