சேலத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாக கழிவுநீருடன் கலக்கிறது.
சேலம் மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்திசெய்ய மேட்டூர் அணையில் இருந்து குழாய்கள் மூலம் குடிநீர் எடுத்து வரப்படுகிறது. இந்நிலையில், லைன்மேடு மார்க்கெட் தெருவில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக வெளியேறுகிறது.
இதனால் குடிநீர் தேவைக்காக மாநகராட்சி நிர்வாகம் செலவிடும் வரிப்பணம் வீணாவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.