ஓசூர் அருகே ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் கோயிலில் துர்காஷ்டமி சிறப்பு யாகம் விமரிசையாக நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பேரண்ட பள்ளி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் கோயிலில், நவராத்திரி உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், துர்காஷ்டமியை முன்னிட்டு 108 சுமங்கலி பூஜை மற்றும் சிறப்பு லட்சார்ச்சனை வழிபாடுகளும் நடைபெற்றன. இதனை தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு யாகத்தில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.