மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அமைந்துள்ள அண்ணன் பெருமாள் கோயிலில் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.
திருவெள்ளக்குளம் பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலில் பிரம்மோற்சவத்தையொட்டி நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
அந்த வகையில் பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து வேத மந்திரங்கள் முழங்க பக்தர்கள் முன்னிலையில் சுவாமிக்கும் தாயாருக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.