மதுரையில் மகன் கண் முன்னே, தாய் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எல்லீஸ் நகரைச் சேர்ந்த செல்வி என்ற மூதாட்டி நேற்று சாலையை கடந்து செல்வதற்கு நடந்து சென்றபோது, அவ்வழியாக அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
எதிர்திசையில் நின்றிருந்த அவரது மகன் கார்த்திக் விபத்தைக் கண்டு பதறியடித்து ஓடி வருவதற்குள் விபத்தில் சிக்கிய மூதாட்டி 20 அடி தொலைவுக்கு இழுத்துச் செல்லப்பட்டு படுகாயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்தை ஏற்படுத்திய நபர் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், போலீசார் சிசிடிவி பதிவுகளின் உதவியுடன் அவரை தேடி வருகின்றனர்.