புத்தகம் படிப்பதை வழக்கமாக கொண்டிருக்கும் இளைஞர்களின் மனம் தீய எண்ணங்களை நோக்கி செல்லாது என உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் மாவட்ட நிர்வாகம் மற்றும் இலக்கிய களம் சார்பில், தனியார் பள்ளி வளாகத்தில் நடத்தப்படும் 11-வது புத்தக காட்சியை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் அதிகளவு புத்தக காட்சிகள் நடத்தப்படுவது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.