திருச்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் சப்ளை செய்து வந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மாநகரின் பல்வேறு பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் சப்ளை செய்யப்படுவதாக, மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்கள் குவிந்தன.
இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் உத்தரவிட்டதன்பேரில், கண்காணிப்பை தீவிரப்படுத்திய போலீசார் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட பிரசாந்த், முகமது இர்பான் மற்றும் ரியாஸ் கான் ஆகிய மூவரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ஏராளமான போதை மாத்திரைகளும், ஊசிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.