நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தில் IAF C-295 விமான அறிமுக தரையிறக்கம் இன்று நடைபெற்றது.
இதனை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
இதனை தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே மட்டும் சுகோய் விமானத்தில் சென்றார். இந்திய விமானப்படையின் சி-295 விமானம் இங்கு தரையிறங்கியதும், சுகோய் போர் விமானத்தில் சென்றதும் மிகப்பெரிய சாதனை என அவர் கூறினார்.
மார்ச் மாதத்திற்கு முன், வணிக விமானங்கள் நவி மும்பை விமான நிலையத்தில் இருந்து செல்லும் என்றும் அவர் தெரிவித்தார்.