அமைதிக்கான நோபல் பரிசு ஜப்பானைச் சேர்ந்த நிஹோன் ஹிடாங்க்யோ அமைப்புக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்படும். இந்தாண்டு ஏற்கெனவே மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் உள்ளிட்ட துறைகளுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 2024ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு ஜப்பானைச் சேர்ந்த நிஹோன் ஹிடாங்க்யோ என்ற அமைப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அணு ஆயுதமில்லா உலகை உருவாக்க எடுக்கப்பட்ட முயற்சிகளுக்காக இந்த அமைப்புக்கு நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது.