கோவை அருகேயுள்ள ஸ்ரீவாரி கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தையொட்டி திருத்தேரோட்ட நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
மேட்டுப்பாளையத்தை அடுத்த ஜடையம்பாளையத்தில் தென் திருப்பதி என்று அழைக்கப்படும் ஸ்ரீவாரி கோயில் உள்ளது.
இக்கோயிலின் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 4-ம் தேதி தொடங்கிய நிலையில், விழாவின் சிறப்பு நிகழ்ச்சியான திருத்தேரோட்ட நிகழ்வு இன்று நடைபெற்றது. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தொடர்ந்து வேத விற்பனர்கள் வேத மந்திரங்களை முழங்க, பக்தர்கள் திருத்தேரை வடம்பிடித்து இழுத்தனர். பக்தர்களின் ‘கோவிந்தா’ கோஷம் விண்ணை முட்ட, 4 மாட வீதிகளிலும் வலம் வந்த தேரானது மீண்டும் நிலை நிறுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.