விஜயதசமியை முன்னிட்டு கோயில்களில் வித்யாரம்பம் - அரிசியில் எழுதி கல்வியை தொடங்கிய மழலைகள்!
Mar 15, 2026, 03:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விஜயதசமியை முன்னிட்டு கோயில்களில் வித்யாரம்பம் – அரிசியில் எழுதி கல்வியை தொடங்கிய மழலைகள்!

Murugesan M by Murugesan M
Oct 12, 2024, 02:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விஜயதசமியை முன்னிட்டு பல்வேறு கோயில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

விஜயதசமி நாளில் குழந்தைகள் கல்வி பயில தொடங்கினால் அவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை. அந்த வகையில் விஜயதசமியை முன்னிட்டு சேலம் – பெங்களூரு சாலையில் உள்ள ஐயப்பா ஆசிரமத்தில் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.

பின்னர் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் பெயரை அரிசியில் எழுத வைத்தும், நெல் மணிகளால் குழந்தைகளின் நாவில் எழுதினர்.  அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோயில்களிலும், பள்ளிகளிலும் வித்யாரம்பம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம் பாரதிபுரத்தில் அமைந்துள்ள ஶ்ரீவனமாலிஸ்வரா சரஸ்வதி கோயிலில் விஜயதசமி சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டது. அப்போது தங்கத்திலான ஆணியை கொண்டு குழந்தைகளின் நாவில் எழுதப்பட்டது.

இதையடுத்து அரிசியில் குழந்தைகளின் பெயர்களை எழுத வைத்து ஏடு தொடங்கும் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இதில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.

தூத்துக்குடியில் உள்ள கலைமகள் ஆலயத்தில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. எஸ்.ஏ.வி. மேல்நிலை பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் சரஸ்வதி தேவிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரிசியில் எழுத வைத்தனர்.

நவராத்திரி விழாவின் நிறைவு நாளான விஜயதசமியை ஒட்டி தஞ்சை மாவட்டம், கும்பகோணம் உள்ள மழலையர் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. முன்னதாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நவதானியங்களில் தமிழ் எழுத்துக்களை எழுத வைத்தனர். இதில் அனைத்து மதத்தினரும் பங்கேற்று தங்கள் குழந்தைகளுடன் கல்வி தொடக்க நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான மழலையர் பள்ளியில் புதிதாக சேர்ந்த குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வி நிகழ்ச்சி நடைபெற்றது. விஜயதசமியை ஒட்டி தருமபுர ஆதின மழலையர் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.மேளதாள இசையுடன் வந்த குழந்தைகளுக்கு ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நாக்கில் மயில் இறகு கொண்டு கல்வியை தொடங்கி வைத்தார். மேலும் நெல்மணிகளில் தமிழ் எழுத்துக்களை எழுத வைத்து குழந்தைகளுக்கு அவர் ஆசிகளை வழங்கினார்.

Tags: VijayadashamiVidyarambam program
ShareTweetSendShare
Previous Post

‘வேட்டையன்’ திரைப்பட ஓ.டி.டி உரிமம் – அமேசான் பிரைம் வாங்கியது!

Next Post

‘வேட்டையன்’ திரைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட இருவர் கைது!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies